Turn Off Light
Auto Next
More
Watch Later
Report

Report


Descriptions:

அன்னை மடியில் : 24.02.1986                                                                                 ஆண்டவன் அடியில் : 26.09.2017
அமரர் காண்டீபன் சிவகுமாரன் 

காலன் கவரும் வயதோடா காண்டீ இது? கலங்க வைத்து போனதேனோ? இடியெனக்கேட்ட செய்தி பொய்யோவென இங்கு நாம் கலங்கி நிற்க எல்லாம் பொய்யென்று எழும்பி வாடா அன்பு நண்பா.

ஹார்ட்லியின் மைந்தனாய் களனி பல்கலையின்  மாணவனாய் தும்பளையின் துடுக்கான இளைஞனாய் நாவலரின் விளையாட்டு வீரனாய் நட்புக்கெல்லாம் இலக்கணமாய் சொந்தங்களின் சொக்கத்தங்கமாய் குடும்பத்தின் குல விளக்காய் மங்காத ஒளியோடு மலர்ந்தவனே மனமுடைத்து போனதேனோ?

உள்ளமெல்லாம் உன் நினைவுகள் உலாவருதே நண்பா காண்டீ நின்னோடு நாங்கள் நிலைத்த பொழுதுகள் நெஞ்சத்தை அறுக்குதே நண்பா காண்டீ என்னய்யா அவசரம் ஏனிந்த துணிகரம்? மனதாலே நீ பெரிய மல்லனல்லோ-பல மண்டைகளை பிழந்தெறிந்த வீரனல்லோ நீதானா இதைச்செய்தாய்..

என்றின்னும்- பேதை நெஞ்சமின்னும் நம்புதில்லை போடா போ கனவாக இச்செய்தி ஆகாதோடா கண்விழித்து எழும்பி நீ சிரிக்காயோடா ஓடிவந்து அணைத்தெம்மை சிரித்தபடி ஒரே ஒரு வார்த்தைதானும் பேசாயோடா? காண்டீ காண்டீ என்று கதறுகிறோம்-

 

தோழா கற்பனையில் உன்னோடு கதைக்கிறோம் சிரிக்கிறோம் ஏண்டா இதைசெய்தாய் என்றுன்னை இருவார்த்தை கேட்டு இழுத்தணைக்க துடிக்கிறோம் தவிக்கிறோம். படிப்பென்றாலும் விளையாட்டென்றாலும் சண்டை என்றாலும் நீதானே கில்லி. கிரிக்கெட்டில் அடிப்பாயே சொல்லி.துயர்பகிர்தலில் சகோதர இனத்தவரின் அதிர்ச்சி கண்டு,இனங்கள் கடந்தும் உன் நட்பின் தொடர்ச்சி பார்க்கையில் பொறாமையாய் இருக்கிறது நண்பா.

ஆளுமையின் உச்சமாய் ஹார்ட்லியின் மாணவதலைவனாய் பல்திறமையாளனாய் விளங்கிய ஒரு புத்திஜீவியை இனம் இழந்து விட்டது நண்பா. பயமென்பதே அறியாத நீ மரணத்தை கண்டும் பயப்படாதவன் என்று காட்டிவிட்டா

யே. வாழ்க்கையின்தொடக்கத்திலேயே இப்படி முடிவுரை எழுதுகிற துணிவு யாருக்குத்தான் வரும்?

Leave your comment

Your email address will not be published. Required fields are marked *